போலீசாரின் பணியை தடுத்தால் ‘குண்டாஸ்’: திருவள்ளூர் எஸ்பி எச்சரிக்கை

திருவள்ளூர்: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாரை தடுப்போர் மீது, குண்டர் சட்டம் பாயும் என எஸ்பி அரவிந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், விடுத்துள்ள செய்திக்குறிப்பு. பொதுமக்கள் அனைவரும், கொரோனோ பரவலை கட்டுப்படுத்த, அனைத்து துறை பணியாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தடுப்பு பணியில் முழுவீச்சில் செயல்படும் மருத்துவ, சுகாதார, காவல், வருவாய் உள்பட அனைத்து துறை பணியாளர்களை பாதிக்கும் வகையிலும், அவர்களின் பணிக்கு இடையுறாக செயல்படுபவர்கள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>