×

அரசு உத்தரவை மீறிய அடகு கடைக்கு சீல்

மாமல்லபுரம்: கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி, 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அதே நேரத்தில், அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க கடைகளுக்கு மதியம் 1 மணிவரை மட்டும் திறந்து இருக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து, மாமல்லபுரத்தில் உள்ள கடைகளில் பொதுமக்கள் கூட்டம் சேராமல் இருக்க போலீசார், வருவாய் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து எச்சரித்து வருகிறது.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அமைந்துள்ள அடகு கடை, அரசின் உத்தரவை மீறி திறக்கப்பட்டுள்ளதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிைடத்தது. அதன்பேரில், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ் தலைமையில் வருவாய் துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது,விதிமுறையை மீறி அடகு கடை திறக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள், அந்த அடகு கடைக்கு வைத்தனர்.


Tags : Mortgage store ,Government , Government Order, Mortgage Store, Seal
× RELATED சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக...