குடியாத்தம் அருகே யானைகள் அட்டகாசம்

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு, கொட்டாமிட்டா பகுதியில் 2 குட்டி யானைகள் உட்பட 7 யானைகள் திடீரென அங்குள்ள மாந்தோட்டத்தில் புகுந்தது. 25 மாமரங்களின் கிளைகளை முறித்து அட்டகாசம் செய்தது. மேலும் கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. தகவல் அறிந்த குடியாத்தம் வனத்துறையினர் வந்து பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் ஏற்றியும் யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டினர். எனினும், யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் அவற்றை நிரந்தரமாக விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>