×

இங்கிலாந்து, ஜெர்மனியில் வைரஸ் மருந்து பரிசோதனை: லண்டனில் இன்று தன்னார்வலருக்கு செலுத்தப்படுகிறது

பெர்லின்: ஜெர்மனியில் கொரோனா வைரசுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இங்கிலாந்தில் இந்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் முறையாக இம்மருந்தை தன்னார்வலருக்கு செலுத்தி சோதிக்க உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதற்கு ஒரே வழி தடுப்பூசி கண்டுபிடித்தால் மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், மருந்தை கண்டுபிடிக்கும் ேசாதனைகள் அதிதீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஜெர்மனியில் புதிதாக தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விலங்குகளிடத்தில் பரிசோதித்து வெற்றிக்கண்டுள்ள நிலையில், தன்னார்வலர்களிடம் இதை செலுத்தி சோதனை நடத்த அந்நாட்டு மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதன்படி இம்மருந்தை கண்டுபிடித்துள்ள பால் எர்லிச் இன்ஸ்டிடியூட் நிறுவனம் ஓரிரு நாளில் தன்னார்வலர்களிடம் இந்த மருந்தை செலுத்தி சோதனை நடத்த உள்ளது. இதன் மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு மருந்தின் வெற்றி நிலவரம் கண்டறியப்படும். இதேபோல், இங்கிலாந்தில் ஆகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானிகள் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதை மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்க அனுமதி பெற்றுள்ளது. இதன்படி இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலரிடம் இந்த மருந்தை செலுத்தி விஞ்ஞானிகள் சோதனை நடத்த உள்ளனர்.  இதில் வெற்றி கிடைக்கும்பட்சத்தில், உடனடியாக மனித குலத்தை ெகாரோனாவில் இருந்து காக்கும் மருந்து கிடைக்கும். ஆனால், இந்த மருந்து தன்னார்வலர்களிடம் நடத்தப்படும் சோதனை முடிவுகள் முழுமையாக வெளியாக குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

Tags : London ,England ,Germany ,Virus Drug Testing , UK, Germany, Antivirus, London, Corona
× RELATED லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்த...