×

தும்மல்ல பரவிச்சு... இருமல்ல பரவிச்சு... தண்ணியில பரவிச்சு...யாராவது ‘பாம்’ போட்டால் பக்கத்திலேயே நிக்காதீங்க....அதிலும் பரவ வாய்ப்பு இருக்காம்

லண்டன்: உங்கள் பக்கத்தில் இருப்பவர் யாராவது நசுக்கி விட்டாலோ அல்லது சத்தமாக வாயுவை விட்டோலோ பக்கத்திலேயே நிற்காமல், காத தூரம் தாண்டிச் சென்றுவிடுங்கள். இல்லாவிட்டால் உங்களை கொரோனா தொற்ற வாய்ப்பு இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் காற்றில் பரவும், பல்வேறு பரப்புகளில் தங்கியிருந்து மனிதர்களை தொற்றும் என பல விதமான பரவும் விதங்கள் குறித்து தினம், தினம் ஒரு ஆராய்ச்சி முடிவில் தெரிய வருகிறது. இதுவரையில் தும்மல், இருமல், எச்சில் துப்புதல், கைகளை தொடுதல் போன்றவற்றால்தான் கொரோனா பரவும் என்று பெரிய அளவில் நிரூபணம் ஆகி உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில், சாலைகளை கழுவும் தண்ணீரிலும் புதிய வகை கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது இப்படி இருக்க கொரோனா நோயாளிகளிடம் புதுவித ஆய்வு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.
அதாவது, கொரோனா நோயாளிகள் அனைவரின் கழிவுகளிலும் வைரஸ் இருந்தன. அவர்களின் மலம், சிறுநீர் ஆகியவற்றில் இந்த வைரஸ் இருப்பதால், நோயாளிகள் தனி கழிவறை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இப்படி மலத்தில் கழிவுகள் இருக்கும்போது, அவர்களின் உடலில் இருந்து வெளியேறும் வாயுவில் வைரஸ்கள் இருககாதா என்று ஆய்வு நடந்தது. ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த ஆய்வில் அதிர்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளன.இந்த ஆராய்ச்சியை நடத்திய ஆஸ்திரேலியா டாக்டர் ஆன்டி டேக் என்பவர் அளித்த பேட்டியில், ‘‘கொரோனா நோயாளிகளில் 55 சதவீதத்துக்கும் மேற்பட்டோரின் மலத்தில் வைரஸ் இருந்தது.

எனவே அவர்கள் வாயுவை வெளியே விடும்போது, அதை நீண்ட தூரத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்று ஊகிக்கப்படுகிறது. அதாவது சம்பந்தப்பட்ட நபர், ஜட்டி மற்றும் பேன்ட் அல்லது வேறு ஆடை போட்டிருக்கும்பட்சத்தில் வைரஸ்கள் அதிலேயே தடுக்கப்பட்டு விடும். ஜட்டி அல்லது இறுக்கமான ஆடைகள் இல்லாமல் சாதாரண ஆடை இருந்து அதன் மூலம் வாயு மிக எளிதாக வெளியே வரும்படி இருந்தால், அதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து அதுபற்றி ஆய்வு நடந்து வருகிறது’’ என்றார். மக்களே.... இனி டர்புர் சத்தம் ேகட்டால், அந்தப்பக்கத்தில் இருந்து விலகி ஓடிவிடுங்கள். அதுதான் பாதுகாப்புக்கு நல்லது.



Tags : Thummulla ,Water spread ,someone ,Dumulla ,Thummella , Coronavirus, coughing, sneezing
× RELATED சிறையில் இருப்பவரை ஜாமீனில்...