×

ஊரடங்கு முடிந்த பிறகும் மாஸ்க் அணியாத பயணிகளை பஸ்சில் ஏற்றக் கூடாது: டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு எம்டிசி உத்தரவு

சென்னை: ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகும் மாநகர பேருந்துகளில் மாஸ்க் அணியாத பயணிகளை கட்டாயம் ஏற்ற கூடாது என்று நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 24ம் தேதி முதல் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் அனைத்து போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 22 ஆயிரம் பேருந்துகள் அந்தந்த பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்வுக்கு பிறகு வரும் மே 4ம் தேதி முதல் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து தொழிலாளர்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது.அந்த சுற்றறிக்கை விபரம் வருமாறு:ஊரடங்கு முடிந்து வரும் 4ம் தேதி முதல் பணிக்கு வரும் பணியாளர்கள் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர ேவண்டும்.
* மணிக்கு ஒரு முறை தங்களது கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* அவரவர் பயன்படுத்தும் பொருட்களை( மேஜை, சேர், கணினி பொருட்கள், ஸ்டியரிங் வீல், பணப்பை, டூல்ஸ்) அவர்களே தங்களது பணி நேரத்தில் இரண்டு, மூன்று முறை சுத்தம் செய்ய  வேண்டும்.
* பணி முடிந்து போகும்போது அவரவர் பயன்படுத்திய பொருட்களை சுத்தம் செய்ய ேவண்டும்.
* காய்ச்சல் மற்றும் கொரோனா சம்மந்தமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் முறைப்படி விடுப்பு எடுத்து கொள்ள வேண்டும்.
* அவரவர் பணியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
* அனைத்து பணியாளர்களும் தங்களது செல்போனில்(Arogya setu app) பதிவிறக்கம் செய்திட வேண்டும். அதன்படி கொரோனா தொற்று அருகில் கண்டறியப்பட்டால் உடனே 104 தொலைபேசிக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
* பணியாளர்கள் பணியின் போது 50 மி.லி கிருமி நாசனி வைத்திருக்க வேண்டும்.
* பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் இல்லாமல் இருந்தால் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது.
* பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளியினை பின்பற்றி பயணம் செய்ய அனுமதிக்க ேவண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Passengers ,drivers ,conductors , Passengers ,not wearing, mask ,curfew should not be loaded, bus
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...