×

மரியாதையான இறுதிச்சடங்கு: அன்புமணி வரவேற்பு

சென்னை: கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு மரியாதையான இறுதிச்சடங்கு ₹50 லட்சம் நிதி அறிவித்ததை, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘கொரோனா சிகிச்சையின் போது உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு விருது, மரியாதையுடன் இறுதிச்சடங்கு, குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்-அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
என்னுடைய கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு நன்றி. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Dharmamani , Honorable Funeral, Welcome, Dharmamani
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...