×

ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த 5 ரோடு மேம்பாலப்பணி மீண்டும் தொடக்கம்: தொழிலாளர்கள் பணியில் மும்முரம்

சேலம்: ஊரடங்கு அமல் காரணமாக சேலத்தில் நிறுத்தப்பட்ட 5ரோடு மேம்பாலப்பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. சேலத்தில் போக்குவரத்து நெரிசலை போக்க 5 ரோட்டை மையமாக கொண்டு ரூ440 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சாரதா கல்லூரி சாலையில் ராமகிருஷ்ணா பிரிவு சாலையில் இருந்து ஏவிஆர் ரவுண்டானா வரை ஒரு பிரிவாகவும், ஓமலூர் சாலையில் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து குரங்குச்சாவடி வரை மற்றொரு பிரிவாகவும் பணி நடந்து வருகிறது. இதில் கடந்தாண்டு ஜூலையில் சாரதா கல்லூரி சாலையில் மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. ஓமலூர் சாலையில் புதிய பஸ் ஸ்டாண்ட், 4 ரோடு, 5 ரோடு, சொர்ணபுரி உள்ளிட்டங்களில் மேம்பாலப்பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதன் காரணமாக 5 ரோடு மேம்பாலப்பணி நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் கட்டுமான தொழிலில் ஈடுபடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த இரு நாட்களாக ஓமலூர் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தூண்களுக்கு தண்ணீர் அடிப்பது, சாலையோரம் சாக்கடை கால்வாய் கட்டுவது, பெயிண்ட் அடிப்பது, சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பாலப்பணி 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 5 சதவீத பணிகள் மட்டுமே உள்ளது. கொரோனா வைரஸ் பீதி குறைந்தவுடன் மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.


Tags : Curfew, 5 Road Works, Start
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...