×

மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா?..மாநில முதல்வர்களுடன் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்களுடன் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். 27-ம் தேதி காணொலியில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20, 471 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 652-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, கொரோனா வைரஸ் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி கடந்த 2 மற்றும் 11ம் தேதிகளில் வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi ,state chiefs , Curfew, State Chiefs, Prime Minister Modi, Adv
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...