×

மருத்துவர்களுக்குக் கூட போதிய வசதி செய்துதர முடியாத அரசு, மக்களை எப்படி காப்பாற்றும்?... மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: மருத்துவர்களையே காக்க முடியாத அரசு, மக்களை எப்படி காப்பாற்றும்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அடிப்படை வசதி கேட்டு போராட்டம் நடந்தது கொரோனாவை விட கொடூரமானது. மக்களை காக்கும் மருத்துவர்களுக்கு கூட போதிய வசதி செய்து தர முடியாத அரசாங்கமா இது?. சில ஆயிரம் மருத்துவர்களை கவனிக்க முடியாத அரசு, பல லட்சம் மக்களை எப்படி காப்பாற்றும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவால் இதுவரை 1596 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில், 635 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர்களையே காக்க முடியாத அரசு, மக்களை எப்படி காப்பாற்றும்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது;

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள மருத்துவ மாணவர்கள் ஆகியோருக்குப் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் கூறி இன்று காலையில் போராட்டம் நடத்திய செய்தி கொரோனாவை விடக் கொடூரமானது.

மக்களைக் காக்கும் மருத்துவர்களுக்குக் கூட போதிய வசதி செய்துதர முடியாத அரசாங்கமா இது? இது மக்களைக் காக்கும் அரசா?. சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாகக் கவனிக்க முடியாத இவர்கள், பல லட்சம் மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது. சென்னை போன்ற பெருநகரில் உள்ள பொது மருத்துவமனையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற மருத்துவமனைகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

Tags : government ,doctors ,facilities , Doctors, Facility, Government, MK Stalin
× RELATED நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில்...