×

பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்

சென்னை: தனது படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட போட்டோவுக்காக, பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் துல்கர் சல்மான்.அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. கடந்த பிப்ரவரி 7ம் தேதி இப்படம் வெளியானது. சுரேஷ்கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தி படவுலகின் பத்திரிகையாளர் சேத்னா கபூர் தனது டிவிட்டர் பதிவில், “துல்கர் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் என்னை பங்குபெற வைத்ததற்கு நன்றி. ஆனால், பொதுவெளியில் என் போட்டோவை வைத்து உருவ கேலி செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த போட்டோ என் அனுமதி இல்லாமல், எனக்கு தெரியாமல் உங்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. நான் அதற்கு உரிமை கோர விரும்புகிறேன்” என்று பதிவிட்டார்.
மேலும், இதுதொடர்பாக படக்குழுவினர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கண்டிப்பாக வழக்கு தொடர்வேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார். ‘வரனே அவஷ்யமுண்டு’ படத்தில் 2 இடங்களில் அவரது போட்டோ இடம்பெற்றுள்ளது. இதனாலேயே பிரச்னை ஏற்பட்டுள்ளது. சேத்னா கபூர் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த துல்கர் சல்மான், தனது டிவிட்டர் பதிவில், “இதற்கு நாங்கள் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்கிறோம். இந்த போட்டோக்கள் எப்படி பயன்படுத்தப்பட்டன என்பதை சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரிக்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு என் தரப்பில் இருந்தும், எனது தயாரிப்பான இப்படத்தின் குழுவினரிடம் இருந்தும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது எந்த உள்நோக்கத்துடனும் செய்யப்பட்டது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Dulquer Salman , Dulquer Salman,apologizes ,press
× RELATED பத்திரிகை சுதந்திரத்திற்கு மத்திய...