×

50 அம்மா உணவகங்களில் 15 நாளுக்கு இலவச உணவு: லாரன்ஸ் ஏற்பாடு

சென்னை: ஐம்பது அம்மா உணவகங்களில் 15 நாளுக்கு இலவச உணவு வழங்க நடிகர் லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார். கொரோனா நிவாரண நிதியாக ₹3 கோடி முதல் கட்டமாக வழங்கினார் லாரன்ஸ். பிறகு தூய்மைப் பணியாளர்களுக்கு ₹25 லட்சம் வழங்கினார். நடிகர் சங்கத்துக்கு ₹25 லட்சமும் விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு ₹15 லட்சமும் அளித்தார். தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அவர் ₹50 லட்சம் வழங்கி இருந்தார்.

அந்த தொகையில், இப்போது ஐம்பது அம்மா உணவகங்களில் 15 நாட்களுக்கு இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் விருகம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்பட மேலும் சில பகுதிகளில் 50 உணவகங்களில் இதுபோல் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளளது. இந்த உதவிக்காக லாரன்சுக்கு தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது.

Tags : Lawrence ,mom restaurants , Free food,15 days , 50 mom restaurants,Arrange by Lawrence
× RELATED 12 முதல் 17 சதவீதம் வரை பிளாஸ்டிக்...