×

கிராமத்தில் ஊரடங்கை கடைபிடிக்க பஞ்சாயத்தார் கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனாவுக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழகத்தில் பெருநகரம், நகரம், கிராமம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அனைவரும் அரசின் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் காவல்துறையின் கண்காணிப்பு அடிப்படையில் மக்கள் நடமாட்டம் ஊரடங்கு உத்தரவுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் ஊராட்சிகளில், கிராமப்புறங்களில் இது போன்ற நிலை முழுமையாக இல்லை.
ஊரடங்கு இன்னும் 12 நாட்கள் நடைமுறையில் இருக்கின்ற வேளையில் கிராமப்புறங்களை பொறுத்த மட்டில் ஊரடங்கை முழுமைப்படுத்த கிராமப்பஞ்சாயத்து அமைப்பினர், ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி கிராமக்கட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இதன் மூலம் கிராமங்களில்  கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த முடியும். எனவே கிராமப் பஞ்சாயத்து அமைப்பினர், ஊராட்சி மன்றங்களும் அப்பகுதியில் உள்ள பெரியவர்களோடு இணைந்து ஊர்க்கட்டுப்பாட்டுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து கொரோனா பரவலில் இருந்து ஊர் மக்களை பாதுகாக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Panchayat ,GK Vasan ,village , Curfew, GK Vasan
× RELATED தூத்துக்குடி தமாகா வேட்பாளர் நாளை...