×

இடைத்தரகர்கள் மூலம் கொரோனா நிவாரணம்: கிராம தொழிலாளர் சம்மேளன நிர்வாகி புகார்

காஞ்சிபுரம்: இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளன காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அவளூர் சீனிவாசன், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது. கொரோனா தொற்று காரணமாக தொழிலாளர் நலவாரிய அலுவலகத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் உறுப்பினராக உள்ள தொழிலாளர்கள், தங்கள் பதிவினை புதுப்பிக்க முடியாமல் உள்ளது. எனவே, பதிவினை புதுப்பிக்கத் தவறினாலும், நலவாரிய உறுப்பினர் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் கொரோனா நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு 2 தவணையாக ₹1000 வீதம் வழங்கியதை ₹5 ஆயிரமாக வழங்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிலர் கொரோனா நிவாரணம் வாங்கி தருவதாக ₹100, ₹200 என வசூல் செய்கின்றனர். இலவசமாக வழங்கும் நிவாரண பொருட்ளுக்கு பணம் வசூலிக்கும் இடைத்தரகர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



Tags : Executive ,Complaint Of Rural Workers Federation ,Village Workers Federation , Corona Relief ,Intermediaries, Report,Village Workers, Federation Executive
× RELATED தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்