×

கோவிட்-19 சிகிச்சையின் போது மருத்துவ கழிவுகளை கையாள்வது எப்படி?: விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

புதுடெல்லி: கோவிட்-19 நோயாளிகள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, மருத்துவ கழிவுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நோயாளிகள் மற்றும் அறிகுறிகள் உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், தனிமை வார்டுகள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், மாதிரிகளை சேகரிக்கும் மையங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்தும் உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட பிரத்யேக வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் மூலமாக அனுப்பப்பட்டுள்ள மருத்துவ கழிவு மேலாண்மை வழிகாட்டுதல் நெறிமுறையில் கூறப்பட்டுள்ளதாவது:
* ஹெச்1 என்1, எச்ஐவி நோயாளிகளிடமிருந்து கிடைக்கும் கழிவுகள் எப்படி கையாளப்படுகிறேதோ, அதே போன்று கோவிட்-19 நோயாளிகளின் கழிவுகளை கையாளும் வகையில் விதிமுறைகள் உள்ளது.
* கோவிட்-19 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உருவாகும் கழிவுகளை, ‘பிரத்யேகமான வண்ணம் கொண்ட தொட்டிகள்/பைகள்/கொள்கலன் வைத்து முறையாக கழிவுகளை கையாள வேண்டும்.
* கோவிட்-19க்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் இருந்து கழிவுகளை சேகரிப்பதற்கு இரட்டை அடுக்கு கொண்ட 2 பைகளை பயன்படுத்த வேண்டும். இதனால் பைகள் வலிமையாகவும், கசிவுகள் இல்லாமலும் இருக்கும்.
* கழிவுகளை அங்கீகரிப்பட்ட ஊழியர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்பு, தற்காலிக சேமிப்பு அறைகளில் தனித்தனியாக வைக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட வார்டுகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் ‘கோவிட்-19’ கழிவு என்று எழுதப்பட வேண்டும். இந்த வார்டுகளில் இருந்து உருவாகும் கழிவுகளை தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். பிரத்யேக தள்ளுவண்டி, சேகரிப்புத் தொட்டிகளை பயன்படுத்த வேண்டும்.
* கோவிட்-19 கழிவுகளை சேமிக்க பயன்படுத்தப்படும் கொள்கலன்கள், குப்பைத் தொட்டிகள், தள்ளுவண்டிகளின் உள் மற்றும் வெளிப்புற மேற்பரப்பை ஒரு சதவீத சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலுடன் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
* கோவிட்-19 சிகிச்சை வார்டுகள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளின் பதிவுகளை பராமரிக்க வேண்டும். விதிகளின்படி உயிரி மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்தல் மற்றும் அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

மற்ற மருத்துவமனைகள் என்ன செய்ய வேண்டும்?
கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்காத பிற மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. அவர்கள் மூலமாக மருத்துவமனை பணியாளர்களுக்கும் வைரஸ் பரவுவதால் பல மருத்துவமனைகள் அச்சத்தில் மூடப்படுகின்றன. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், ‘சந்தேகத்திற்கு இடமான, உறுதிபடுத்தப்பட்ட கொரோனா நோயாளி கண்டறியப்பட்ட உடன், விரைவாக தனிமைபடுத்துதல், தொடர்பு கொண்டவர்களை அடையாளம் காணுதல், கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்வது போன்றவை செய்யப்பட்டால் முழு மருத்துவமனையையும் மூட வேண்டிய அவசியமில்லை. புதிய நோயாளிகள் அடுத்தடுத்து கண்டறியப்பட்டால் மருத்துவமனையின் வரையறுக்கப்பட்ட பகுதியை தற்காலிகமாக மூடுவது நல்லது. முழுமையாக சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகு அப்பகுதியை மீண்டும் பயன்படுத்தலாம்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : treatment ,Kovit-19 ,Federal Government , treat medica, waste during , treatment, Kovit-19?
× RELATED உடல் பருமனை குறைப்பதற்கான...