×

கட்டுப்பாடுகளை தளர்த்த இது சரியான நேரம் அல்ல: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பாங்காக்: ‘ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இது சரியான நேரமல்ல. இதனால், கொரோனா பாதிப்புகள் அதிகமாகும்,’ என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலுக்கு பின்னரும், அமெரிக்கா தனது பொருளாதாரத்தை சீரமைக்கவும், புதுப்பிக்கவும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இதனால், போயிங் உள்ளிட்ட கனரக உற்பத்தி தொழிற்சாலைகள் அமெரிக்காவில் செயல்பட தொடங்கி உள்ளன. பொருளாதார மந்தநிலை, அதிகரித்து வரும் வேலையின்மை ஆகியவற்றால் ஏற்படும் சிக்கலை சரிக்கட்ட சில நாடுகளின் தலைவர்கள் ஊரடங்கை தளர்த்தி வருகின்றனர்.ஆஸ்திரேலியாவில், மருத்துவமனைகளில் வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி இருப்பதால், அடுத்த வாரம் முதல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு படிப்படியாகவே தளர்த்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி நாடுகளில் பொருளாதார சீரமைப்பு என்பது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.இதனிடையே, பொருளாதார புதுப்பித்தல் குறித்து மேற்கு பசிபிக் பிராந்தியத்துக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாகெசி கசாய் கூறுகையில், ``ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இது சரியான நேரம் அல்ல. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு்அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டும். வைரஸ் பரவலைத் தடுக்கவும், ஊரடங்கு, சமூக இடைவெளி ஆகியவற்றை படிப்படியாக தளர்த்துவதிலும் உலக நாடுகளின் அரசுகள் விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும்,’’ என்று கூறினார்.

Tags : World Health Organization , right time ,relax controls,World Health Organization
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...