×

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கவலைக்கிடம்? மறுக்கிறது தென்கொரியா

சியோல்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவருக்கு இருதய பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரும்புத்திரை கொண்ட நாடு என்பதால், அங்கிருந்து எந்த செய்தியும் முறைப்படி வெளியாவது கிடையாது. எல்லாமே யூகங்கள் மற்றும் உளவாளிகள் கூறும் தகவல்களின் அடிப்படையில்தான் உலகத்துக்கு தெரிய வருகின்றன. இந்த வகையில், கிம் ஜாங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் உடல்நலம் தேறிய நிலையில், திடீரென மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கடந்த 11ம் தேதியில் இருந்து வெளி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. தற்போது அவருக்கு ரகசிய இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது என்று அமெரிக்காவின் சி.என்.என் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

வடகொரியாவின் தந்தை என்றழைக்கப்படும் கிம் இல் சங்கின் பிறந்த நாள் விழா கடந்த 15ம் தேதி நடந்தது. இவர் அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா. எந்த ஆண்டும் தாத்தாவின் பிறந்த நாள் விழாவை மட்டும் கிம் ஜாங் உன் ெகாண்டாடாமல் இருந்தது இல்லை. ஆனால், முதல் முறையாக இந்த ஆண்டு நாட்டின் தந்தை பிறந்த நாள் விழாவில் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை. அப்போதே நாட்டு மக்களுக்கு பெரும் சந்தேகம் இருந்தது.
அண்டை நாடுகளான தென்ெகாரியா, ஜப்பான் உள்ளிட்டவை இதுகுறித்து தோண்டித் துருவி விசாரிக்க ஆரம்பித்தன. இதில்தான் கிம் ஜாங் உன் கவலைக்கிடமாக இருப்பது தெரியவந்தது. இதனால் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு சில ராணுவ தளபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், வடகொரியா அதிபர் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்று அண்டை நாடான தென்ெகாரியா கூறியுள்ளது.

உலகமே கொரோனாவால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த பாதிப்பு இல்லாத ஒரே நாடு வடகொரியா என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் இந்நோய் பரவ ஆரம்பித்தபோதே, தன் எல்லைகளை மூடியதால், வடகொரியாவில் கொரோனா பரவவில்லை என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது. ஆனால், ஓரிரு பேர் பாதிக்கப்பட்டபோதே வடகொரியா ராணுவம் ்அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டது என்று அண்டை நாடான தென்கொரியா கூறி வருகிறது. நோய் பரவல் பற்றி கவலைப்படாவிட்டாலும், அதிபரை பற்றிய செய்தியால் அந்நாடே இப்போது அல்லலோகப்பட்டு வருகிறது.

Tags : Kim Jong ,North Korean ,South Korea , orth Korean President Kim Jong Un, South Korea
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...