ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் 800 பேருக்கு நிவாரண உதவி: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் முடித்திருத்துவோர் உள்ளிட்ட 800 பேருக்கு அரிசி, பிஸ்கட், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி,  சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில், திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கே.இப்ராகிம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர் ராஜா, துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>