×

பாலக்காட்டில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு: மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்

பாலக்காடு:  பாலக்காடு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருந்தாலும் மக்களிடம் கொரோனா பீதி விலகாததால் சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவில் ஒரு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பாலக்காடு மாவட்டத்தில் நேற்று முதல் அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், வங்கிகள், வழக்கம்போல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து இல்லாத காரணத்தால் அலுவலகங்களில் குறைந்த அளவிலான ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர். வங்கி, பொது நிறுவனங்களில் குறைந்த அளவிலான மக்கள் வந்து, தங்களது தேவைகளை பூர்த்தி செய்து விட்டு விரைவாக வீடு திரும்பினர்.

கேரள-தமிழக எல்லை சோதனைச்சாவடிகளான முள்ளி, ஆனைக்கட்டி, வாளையார், வேலந்தாவளம், கோபாலபுரம், குப்பாணக்கவுண்டனூர், நடுப்புணி, மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், செம்மணாம்பதி ஆகிய இடங்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அத்யாவசியப் பொருட்கள் ஏற்றி வருகின்ற சரக்கு வாகனங்களை மட்டும் போலீசார் கூடுதல் கண்காணித்து கேரளாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கின்றனர். பாலக்காடு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவில் கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்தியிருந்தாலும், மக்களிடையே கொரோனா பீதி குறையவில்லை. அரசு அலுவலங்கள் வழக்கம்போல் செயல்பட்டாலும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் சாலைகள் அனைத்துமே வெறிச்சோடி காணப்பட்டது. தனியார் வாகனங்கள் குறைந்தளவே இயங்கி வருகின்றன. மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் பார்சல் சர்வீஸ், ஹோட்டல்கள் ஆகியவை நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டன.

3 ஊராட்சிகளில் ஊரடங்கு
பாலக்காடு நகராட்சி பகுதி உட்பட கோட்டோப்பாடம், காரககுறிச்சி, மற்றும்  காஞ்ஞிரப்புழா ஆகிய ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் தொற்று  பாதிப்பு காரணமாக  தற்போதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இப்பகுதிகளில் உள்ள கடைகள்,  ஓட்டல்கள், வங்கிகள், பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்துமே  மூடப்பட்டுள்ளது. வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை.  இந்த ஊராட்சி நுழைவுப்பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.


Tags : Palakkad ,walk ,Roads ,Relaxation: People's Walk Without Roads , Palakkad, curfew
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது