×

சேலத்தில் 2 இடங்களில் தானியங்கி வெப்ப கண்காணிப்பு கருவி அமைப்பு: கமிஷனர் தொடங்கி வைத்தார்

சேலம்: கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைக்காக சேலம் மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி வெப்ப கண்காணிப்பு கருவியின் செயல்பாட்டினை கமிஷனர் சதீஷ் தொடங்கி வைத்தார். சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணியாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது வெளிகள் மற்றும் அனைத்து குடியிருப்பு பகுதிகளில் இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் கைத்தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம் மற்றும் குமாரசாமிப்பட்டி நகர்புற சமுதாய சுகாதார நிலையத்திலும் வரக்கூடிய பொதுமக்களின் நலன் கருதி பெரு நிறுவனங்களின் சமுதாயப் பொறுப்பு நிதியுதவியின் கீழ் இந்தியன் வங்கி சார்பில் தானியங்கி வெப்ப கண்காணிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் வரக்கூடிய பொதுமக்களின் உடலின் வெப்ப நிலை கண்காணிக்கப்படுவதால் காய்ச்சல், இருப்பவர்கள் உடனடியாக அடையாளம் கண்டு உரிய மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள், ஒரு நிமிடத்திற்கு 20 நபர்கள் இக்கருவி மூலம் பரிசோதிக்கப்படுவார்கள். இக்கருவியினை சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது என மாநகராட்சி கமிஷனர் சதீஷ் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் உன்னிகிருஷ்ணன், அருணாசல ஆசாரி தெரு கிளை மேலாளர் கலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : commissioner ,locations ,Salem , Salem, automatic heat monitoring tool, system
× RELATED சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000...