×

ஊரடங்கு மட்டும் போதாது; கொரோனா பாதித்தவரை கண்டறிந்து, பரிசோதனை செய்ய வேண்டும்...WHO இயக்குநர் டெட்ராஸ் கருத்து

வாஷிங்டன்: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில்  பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர்களில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 170,435 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,481,236 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 646,848 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 56,766 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார மைய இயக்குநர் டெட்ராஸ் அத்நாம், பொதுமக்கள் தனித்திருப்பதாலும், சமூக விலகலை பின்பற்றுவதாலும் வைரசை கட்டுப்படுத்த முடியாது. ஊரடங்குடன் கொரோனா பாதித்தவரை கண்டறிந்து, பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், தனிமைப்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு தொடர்புடைய நபர்களையும் கண்டறிவது அவசியம் என்பதை அரசாங்கங்கள் உறுதி செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுமட்டுமில்லாமல், கொரோனாவை அழிக்க வேண்டும் என்றால் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் டெட்ராஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Corona ,victim ,WHO , Curfew is not enough; Corona needs to find and test the victim ... WHO Director Tetras comment
× RELATED கோவிஷீல்டு ஆபத்தானதா… உண்மை என்ன?