×

சில்லி பாயின்ட்...

* கொரோனா தொற்று காரணமாக எழுந்துள்ள பிரச்னைகள், ஒத்திவைக்கப்பட்டுள்ள தொடர்களுக்கு புதிய அட்டவணை தயாரித்தல் குறித்து உறுப்பினர் நாடுகளின் கிரிக்கெட் வாரிய தலைமை செயலதிகாரிகள் அடங்கிய குழுவுடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசிக்க உள்ளது. இதையொட்டி ஏப்ரல் 23ம் தேதி வீடியோ கான்பரன்சுக்கு ஐசிசி அழைப்பு விடுத்துள்ளது.
* போட்டிகள் ரத்தாகி வீட்டுக்குள் முடங்கியுள்ளதால் பல கால்பந்து வீரர்கள் மன ரீதியாக சோர்வடைந்துள்ளனர். இது குறித்த தகவல்கள் வெளியாகத் தொடங்கி உள்ளதை அடுத்து வீரர், வீராங்கனைகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்குவது குறித்து சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ‘பிபா’ பரிசீலித்து வருகிறது.
* சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது கேப்டன் டோனி என் மீது எப்போதும் முழு நம்பிக்கை வைத்து ஆதரிப்பார் என்று வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
* பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்கள் வீரர்களுக்கு ஆன்லைனில் உடல்தகுதி பரிசோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளது.
* தென் ஆப்ரிக்க அணி ஜூன் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருந்த நிலையில், இந்த தொடர்களை ஒத்திவைப்பதாக தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
* உலக கோப்பை தொடரில் தான் உபயோகித்த பேட் மற்றும் உபகரணங்களை ஏழைக் குழந்தைகளின் கல்வி மற்றும் உடல்நலனுக்காக ஏலம் விட கிரிக்கெட் நட்சத்திரம் கே.எல்.ராகுல் முன்வந்துள்ளார்.


Tags : Hazelwood , touch,residue , polish ,ball ,Hazelwood worries
× RELATED நியூசி. 162 ஆல் அவுட்