×

இனி எச்சில் தொட்டு பந்தை பாலிஷ் செய்யலாமா?: ஹேசல்வுட் கவலை

கொரோனா பிரச்னை மிக விரைவில் ஓய்ந்து இயல்புநிலை திரும்ப வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நீங்கி கிரிக்கெட் போட்டிகள் நடக்க ஆரம்பிக்கும் சமயத்தில் ஒரு புதிய பிரச்னை காத்திருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். பந்து ஸ்விங் ஆக வேண்டும் என்பதற்காக பவுலர்கள் எச்சில் தடவி தங்களின் பேன்ட்டில் அழுத்தி தேய்ப்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம். கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்த பழக்கம் நீடிக்குமா... அல்லது வழக்கொழிந்து போகுமா? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி. இது குறித்து ஆஸி. வேகம் ஜோஷ் ஹேசல்வுட் கூறியதாவது: உண்மையிலேயே மிக சீரியசான பிரச்னை தான். இது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.

ஒருநாள், டி20 போட்டிகளில் வெள்ளை நிறப் பந்தை குறைந்த ஓவர்களுக்கே பயன்படுத்துவதால் அவ்வளவாக சிரமம் இருக்காது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இது மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும். 80 ஓவருக்கு பிறகே புதிய பந்து எடுக்க முடியும் என்ற நிலையில், பந்தை பாலிஷ் செய்ய எச்சிலை உபயோகிக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டால் வேகப் பந்துவீச்சாளர்கள் மண்டை காய்ந்துவிடுவார்கள். பேட்ஸ்மேன்களுக்கு கொண்டாட்டமாகி விடும். அதே சமயம் வீரர்களின் உடல்நலமும் முக்கியமும். அதில் சமரசம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதில் நன்கு ஆலோசித்த பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு ஹேசல்வுட் கூறியுள்ளார்.


Tags : Hazelwood , residue, polish ,ball , Hazelwood worries
× RELATED நியூசி. 162 ஆல் அவுட்