×

தயாரிப்பாளர் சங்க தேர்தல் விஷால் அணி போட்டியில்லை

சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணி போட்டியிடாது என தெரியவந்துள்ளது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். வருகிற 2 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், ஜூன் 21ம் தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.  

இந்த தேர்தலில் டி.சிவா தலைமையில் ஒரு அணி, மறைந்த தயாரிப்பாளர் ராமநாராயணின் மகன் முரளி தலைமையில் ஒரு அணி, டி.ஜி.தியாகராஜன் தலைமையில் ஒரு அணி ஆகிய 3 அணிகள் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக விஷால் தலைமையிலான அணி நிர்வாக பொறுப்பில் இருந்தது. இந்த முறை தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு எடுக்கவில்லை என்றும், இந்த தேர்தலில் விஷால் உள்பட அவரது அணியிலிருந்து யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

Tags : Producers Association Election Vishal Team Contest Producers Association Election Vishal Team Contest , Producers Association, Election Vishal ,Team Contest
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...