×

அதிமுக செய்தி தொடர்பாளராக புகழேந்தி நியமனம்

சென்னை: அதிமுக செய்தி தொடர்பாளராக புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக மாநிலத்தின் அதிமுக செய்தி தொடர்பாளராக வா.புகழேந்தி இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளராக புகழேந்தி இருந்தார். இவர், சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : spokesperso ,AIADMK , pugazhendhi , AIADMK spokesperso
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...