×

மறைந்த கொரோனா வீரர்களின் இறுதி மரியாதை கவுரவமாக நடத்தப்பட வேண்டும்: தமிழக பாஜ தலைவர் கோரிக்கை

சென்னை: மறைந்த கொரோனா வீரர்களின் இறுதி மரியாதை கவுரவமாக நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த இரண்டு டாக்டர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சென்னையை சேர்ந்த அந்த பகுதி மக்கள் அடுத்தடுத்து எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை செய்த செய்திகள் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. கொரோனாவுக்கு எதிரான யுத்தம், உலக போருக்கு நிகரான யுத்தம். இந்த போரில் உயிர் துறக்கும் வீரர்கள் பாதுகாப்பு படை வீரர்களுக்கு சமமானவர்கள். இவர்களை கவுரவிக்கும் பொறுப்பு சமுதாயத்தை சேர்ந்தது. இதுபோன்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அரசு அதிகாரிகள் பக்குவமாகவும், மீறினால் அதிகாரத்தை பயன்படுத்தியும் சரி செய்ய வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற ஆட்சேபனைகள் இனி எழாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

மறைந்த கொரோனா வீரர்களின் இறுதி மரியாதை கவுரவமாக நடத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் பொதுமக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டுமென இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன். இதுபோன்ற சூழ்நிலையில் பாஜ தொண்டர்களும் தானாக முன்வந்து அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், இனி யாரேனும் கொரோனாவினால் உயிரிழக்க நேரிட்டால், உடனடியாக முன்வந்து, பாஜ செய்து வரும் எத்தனையோ சேவை பணிகளில் இதுவும் ஒரு முக்கியப் பணி என்பதை கருத்தில் கொண்டு சேவை செய்ய வேண்டும். மறைந்த மருத்துவர்களுக்கு பாஜ சார்பில் அஞ்சலியையும், அவர் தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்றேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : coroners ,Funeral ,BJP , Corona, BJP leader
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...