×

ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு; வெள்ளூரில் பதுக்கிய 150 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: மதுவிலக்கு போலீசார் அதிரடி

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூரில் பதுக்கிய 150 லிட்டர் சாராய ஊறலை மதுவிலக்கு போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சப்-டிவிசனுக்கு உட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணைகாவல் கண்காணிப்பளர் பீட்டர் பெலிக்ஸ், இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, சப்இன்ஸ்பெக்டர்கள் மீஹா, ராமகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முத்துராஜ், சுப்பிரமணியன், மணிமாறன், அருணாசலம்,

ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் சேது என்பவரது வாழைத் தோட்டத்தில் சோதனை நடத்தினர். அப்போது சுமார் 150 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்து அழித்தனர். இதுதொடர்பாக வெள்ளூரை சேர்ந்த ராமலிங்கம் மகன் சேது என்பவர் மீது தூத்துக்குடி மதுவிலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

Tags : Srivaikundam ,Alcohol police action ,Vellore ,Ecstasy , Srivaikundam, Alcohol and Destruction
× RELATED திருச்செந்தூர் கோயிலுக்கு ராஜகோபுரம்...