×

கொரோனா பரவல் ஊரடங்கால் பாலியல் தொழில் படுத்தது; ‘ஒர்க்கிங் ஃபிரம் ஹோம்’-ல் பணம் கொழிக்கும் செக்ஸ் தொழிலாளர்கள்: வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு உயர்வு

லண்டன்: கொரோனா பரவலால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில், பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை படுத்துவிட்டது. அதனால், வீட்டிலிருந்தே ‘ஒர்க்கிங் ஃபிரம் ஹோம்’ முறையில் செக்ஸ் தொழிலாளர்கள் பணம் கொழித்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு உயர்ந்துள்ளதாக ஆன்லைன் ேகம் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வரும்நிலையில், 100க்கும் மேற்பட்ட நாடுகள் ஊடரங்கை அமல்படுத்தி உள்ளன. கொரோனா பீதி மக்களை ஒருபக்கம் வாட்டி எடுத்தாலும், பல்வேறு ெதாழில்துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் சாதாரணமாக அனுமதிக்கப்படும் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலால் அனைத்து கேளிக்கை கூடங்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. அதனால், வருமானத்திற்காக போராடும் நிலைக்கு தள்ளப்படுவது மற்றுமின்றி வீடற்றவர்களாக அலைந்து வருகின்றனர்.

பெரும்பாலான நாடுகளில் இப்படி ஒரு சூழ்நிலை இருக்கும் நிலையில், இங்கிலாந்தை பொறுத்தமட்டில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அந்நாடு கடுமையான ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மக்கள் வீட்டிலேயே இருக்கும்படியும், தங்கள் வீட்டில் வசிக்காத எவருடனும் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கும்படியும் கூறி வருகிறது. இந்நிலையில், செக்ஸ் தொழிலாளர்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நிகி ஆடம்ஸ் என்பவர், ‘தி இன்டிபென்டன்ட்’ என்ற பத்திரிகையிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ் ஊரடங்கால், ஏற்கனவே இருக்கும் நெருக்கடியைவிட தற்போது கூடுதலாகி உள்ளது. இங்கிலாந்து முழுவதும் சமீபத்திய ஆண்டுகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நெருக்கடியில்தான் வாழ்ந்து வருகிறோம். கொரோனா வைரஸ் பிரச்னை எங்களுக்கு ஒரு பேரழிவாக மாறிவிட்டது. பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்ற இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் வருமானம் அனைத்தும் குழந்தைகளை படிக்க வைப்பது உள்ளிட்ட வகைகளில் செலவாகிவிடுகிறது. சேமிப்பு என்பதே எங்களிடம் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் ஒரு பாலியல் தொழிலாளியாக தெருக்களில் நடந்து சென்றால், உடனடியாக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, துன்புறுத்தலுக்கு ஆளாகிறோம். சில சந்தர்ப்பங்களில், பெண்கள் பட்டினி கிடக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவலால் பல தொழில்களும் முடங்கிய நிலையில், பாலியல் தொழிலாளர்களுக்கு அவசரகால நிதிஉதவி வழங்க வேண்டும் என்றார். இங்கிலாந்தில் நிலைமை இப்படி இருக்க, அமெரிக்காவில் நேரடி ஆன்லைன் ஒளிபரப்புகளை ‘ஸ்ட்ரீம்’ செய்யும் பல ஆபாச ‘வெப்கேம்’ அல்லது ‘கேமிங்’ தளங்களில் ஒன்றான ‘கேம்சோடா’வில் ‘கேம் மாடல்’கள் ஆபாசமாக தோற்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்கள். பார்வையாளர்கள் சம்பந்தப்பட்ட மாடல்களுடன் ஆடவேண்டுமானால் அந்த நபர்கள் கேமராவில் ேதான்றி அவருடன் நடனமாடலாம். கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மார்ச் மாதத்தில் புதிய மாடல்களின் ஒப்பந்தம் 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக கேம்சோடாவின் துணைத் தலைவர் டேரின் பார்க்கர் கூறுகிறார்.

அதேநேரம், மற்றொரு கேமிங் தளமான ‘மனிவிட்ஸி’ன் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பெல்லா பிரஞ்சு, புதிய மாடல்கள் வருகை 69 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். சுமார் 16 மில்லியன் அமெரிக்க மக்கள் கடந்த மூன்று வாரங்களில் வேலையின்மையால், புதிய வேலைகேட்டு பல இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். பலர் பாலியல் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நடத்துவதில், புதிய வேலைக்கு முயன்று வருகின்றனர். ஏறக்குறைய பாதி உலகம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால், ஒருவிதமான மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ‘கேம்சோடா’ தளத்தில், 2019ம் ஆண்டின் முற்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு புதிய பார்வையாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த பட்டியலில் புதியதாக சேர்ந்துள்ளவர்கள் அமெரிக்க பாலியல் தொழிலாளர்கள்தான். இவர்களின் ெதாழில் ‘படுத்து’விட்டதால், தற்போது ஆன்லைன் ‘கேம்’களில் புகுந்து விளையாடுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்பு, பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள், ஆபாச படங்களில் நடிப்பது, மாலையில் மதுக்கடைகளில் பணிபுரிதல், நேரம் கிடைத்த போது ‘கேம்’ செய்தல், அலுவலக வேலைகளில் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தற்போது ஆன்லைன் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது, ​​பலருக்கு வேலை கிடைத்து வருகிறது. ஒரு நாளைக்கு 12 மணிநேரம் ‘கேம்’ நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில், வாடிக்கையாளர்களின் பாலியல் அரட்டை, கேள்வி - பதில் போட்டிகள், பரிசுகள் என்று அமக்களப்படுத்துகின்றனர். டொராண்டோவில் உள்ள கேம் மாடலான சிசிலியா மோரெல் கூறுகையில், ‘புதிய மாடல்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் ‘மாடல்’கள் தனித்து நிலைத்து நிற்பது கடினம். கொரோனா வைரஸ் காரணமாக ‘சமூக இடைவெளி’ பின்பற்ற சொல்வதால், இப்போது எங்களது ஆன்லைன் தொழில் நன்றாக போகிறது.

இதனால், தனியுரிமை மீறல்கள், வாடிக்கையாளர்களுடனான ஆபத்தான தொடர்புகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்க வடிவமைக்கப்படாத சட்டங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கர்கள் பல இழப்புகளை சந்தித்து வரும் நிலையில், வீட்டிலிருந்தே பாலியல் நேரடி நிகழ்ச்சிகளை வழங்குவதால், எங்களது உடல் ஆரோக்கியம் கெடுவதில்லை. நன்றாக பணம் சம்பாதிக்க முடிகிறது.’ என்றார்.


Tags : sex workers ,Corona ,clients ,home , Sex workers, sex workers
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...