×

கொரோனாவால் உயிரிழப்போர் உடலை அடக்கம் செய்ய எனது கல்லூரியின் ஒரு பகுதியை பயன்படுத்தி கொள்ளுங்கள்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் உயிரிழப்போர் உடலை அடக்கம் செய்ய இடம் தரத் தயார் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஒரு பகுதியை தருவதாகவும் மேலும் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தது அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உடலை வேறு பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அம்பத்தூரில் ஏற்கெனவே ஆந்திர மாநில மருத்துவர் பலியான போது அவரை அந்த இடத்தில் அடக்கம் செய்யக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோன்று, ஆந்திராவை சேர்ந்த மருத்துவர் ஒருவர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி கடந்த வாரம் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்யவும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவரது உடல் அம்பத்தூருக்கும், திருவேற்காடுக்கும் ஆம்புலன்ஸுல் எடுத்து செல்லப்பட்ட சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய தான் இடம் தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாமண்டூரில் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள தமது ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்போரின் உடலை அடக்கம் செய்ய இடம் தருவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மனிதநேய உணர்வுடன் அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை பலதரப்பினரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

Tags : Vijayakanth Announcement ,Corona , Corona, modesty, college, Vijayakanth
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...