×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகள் 3 மண்டலமாக பிரித்து வாரத்தில் 2 நாட்கள் வெளியில் வர அனுமதி: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 பேரூராட்சி பகுதிகளை 3 மண்டலங்களாகப் பிரித்து, அதன் அடிப்படையில் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வெளியில் வர அனுமதி அளித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரே நகராட்சியான காஞ்சிபுரம் பெருநகராட்சி 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. 9 வார்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மற்ற 42 வார்டுகள் 5 மண்டலங்களாகப்  பிரிக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு வண்ண கார்டுகள் வழங்கப்பட்டு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியே வரவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மாவட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சிப் பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் பேரூராட்சிப் பகுதிகள் தலா 3 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு வண்ண கார்டுகள் வழங்கி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியே வரவேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் காலை 6 மணிமுதல் பகல் 1 மணிவரை குடும்பத்தில் ஒருவர் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியில் வரலாம். வரும்போது பேரூராட்சியால் வழங்கப்பட்ட வண்ண கார்டுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை கொண்டுவரவேண்டும். வெளியில் வரும் பொதுமக்கள் நடக்கும்போதும், வாகனத்தில் செல்லும்போதும், பொருள்கள் வாங்கும்போதும் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


முக்கிய தேவைக்கான வாட்ஸ்அப் எண்கள்
பொதுமக்களின் மருத்துவசேவை போன்ற மிக முக்கியமான தேவைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்களை தொடர்பு கொள்ளலாம். குன்றத்தூர் 7824058573, மாங்காடு 7824058576, ஸ்ரீபெரும்புதூர் 7824058580, உத்திரமேரூர் 7824058584, வாலாஜாபாத் 7824058585.



Tags : zones ,Kanchipuram district ,district , Permission ,release 2 days,Kanchipuram district ,three zones,Collector Information
× RELATED குடும்ப பிரச்னையில் மனைவி அளித்த...