×

போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம்: சிஐடியு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: போக்குவரத்துக் கழகங்களில் பஸ் பாடி கிளீனர்கள், டிக்கெட் கேன்வாசர்கள், சரக்கு ஏற்றும், இறக்கும் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் போன்றோர் பீஸ் ரேட் அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் பேருந்து இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டு, இவர்கள் வருமானம் முற்றிலும் நின்றுவிட்டது. இந்த தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணமாக வழங்க வலியுறுத்தி கடந்த 30ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தங்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.

தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இத்தொழிலாளர்கள் மேலும் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். ெதாழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யுங்கள் என்பது பிரதமரின் அறிவுரையாகும். எனவே போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் ₹10,000 நிவாரணம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : contract workers ,CITU ,transit centers , Transport Unions, Relief, CITU
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு