×

இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பாவில் கொரோனா பலி 1 லட்சத்தை தாண்டியது: உலக இறப்பில் மூன்றில் இரண்டு பங்கை கடந்தது

லண்டன்: இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. உலக இறப்பில் மூன்றில் இரண்டு பங்கை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இது உலகளவில் மொத்த கொரோனா வைரஸ் இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். உலகளவில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இதுவரை 1,57,163 பேர் இறந்துள்ளனர். அதில், ஐரோப்பாவில் மொத்தம் 11,36,672 பேர் கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 1,00,501 பேர் இறந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை 37,158 பேர் இறந்துள்ளனர். அதே நேரத்தில் 710,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த இடத்தில் உள்ள இத்தாலியில் கொரோனா தொற்று காரணமாக 22,745 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,72,434 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. அங்கு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் மையமான நியூயார்க் நகரில் 1,22,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ கூறுகையில், ‘கொரோனா வைரஸ் தொற்று, அதன் உச்சபட்ச எல்லையை கடந்ததாகத் தெரிகிறது. தினசரி இறப்பு எண்ணிக்கை 550க்கும் கீழ் குறைந்துள்ளது. வைரசால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை சுமார் 18,000 வரை இருந்தது. தற்போது 16,000 வரை தொடர்ந்து குறைந்து வருகிறது. அவசர சிகிச்சை பிரிவு அறைகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளன’ என்றார்.


Tags : Corona ,Europe ,Italy ,Spain ,world deaths , Italy, Spain, Europe, Corona killed
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...