×

சுற்றுலா சென்றபோது ஊரடங்கு உத்தரவு உ.பி.யில் சிக்கி தவித்த 126 பேர் 3 பஸ்சில் சென்னை திரும்பினர்: தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை

சென்னை: ஊரடங்கு உத்தரவால் உ.பியில்  தவித்த தமிழகத்தை சேர்ந்த 126 பேர் சென்னை திரும்பினர். தமிழகத்தில் இருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 59 ஆண்கள், 65 பெண்கள், 2 குழந்தைகள் என 126 பேர், உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள், ஊரடங்கு உத்தரவால் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் ஒரு மாதமாக அவதிப்பட்டனர். இதையடுத்து அம்மாநில நிர்வாகம், அவர்களை 3 பஸ்களில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னைக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் நேற்று முன்தினம் தமிழக, ஆந்திரா மாநில எல்லையான திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடிக்கு வந்தனர்.

அங்கு தயாராக இருந்த மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் தலைமையிலான போலீசார் மற்றும் சுகாதார அதிகாரிகள், அந்த 126 பேரையும், திருவள்ளூர் அடுத்த தனியார் மருத்துவ கல்லூரி மையத்திற்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இவர்களுக்கு பரிசோதனை முடிவில்தான் கொரோனா உள்ளதா என்பது தெரியவரும் என மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் கூறினார்.

Tags : persons ,Chennai ,curfew ,trip ,UP ,Corona ,passengers , 126 passengers, UP on curfew ,returning,Chennai
× RELATED குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனை: 165 நபர்கள் கைது