கறிவிருந்து நடத்தி டிக்டாக்கில் பதிவு 10 வாலிபர்கள் கைது

மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தமிழ்புத்தாண்டு தினத்தன்று (ஏப்ரல் 14) வயல்வெளியில் பந்திபோட்டு பிரியாணி விருந்து நடத்தியதோடு, அதை டிக்டாக்கில் பதிவிட்டது வைரலானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில், மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் பகுதி என்று தெரியவந்தது.இந்நிலையில் நேற்று அதிகாலை தனிப்படை போலீசார் வில்லியநல்லூர் கிராமத்திற்கு சென்று கறிவிருந்தில் கலந்து கொண்ட 10 பேரை பிடித்து மணல்மேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை மணல்மேடு போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>