×

ஐகோர்ட் வக்கீல்குமாஸ்தாவுக்கு கொரோனா

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்த வக்கீல் குமாஸ்தா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மற்றம் ‘ஜூம் ஆப்’ என்ற முறையிலும் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த வாரம் 3 நாட்கள் அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்நிலையில் அரசு வக்கீல்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்ற தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த நீதிமன்றத்தில், நீதிபதிகள் மற்றும் ஆஜாராகி இருந்த அட்வகேட்ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர் மற்றும் நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பு மற்றும் எதிர் தரப்பு வக்கீல்கள் ஆகியோருக்கு நேற்று மாலை அவசர அவசரமாக ரேபிட் கிட் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.அதில், இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று வந்தது. இருந்தாலும் அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இன்னும் 14 நாட்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,lawyer ,Icort , High Court, lawyer kumasta, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...