×

மும்பையில் அதிர்ச்சி கடற்படை வீரர்கள் 26 பேருக்கு பாதிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதல், உலகளவில் ராணுவத்தையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவின் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் விமானத் தாங்கி கப்பலில் 660.க்கும் மேற்பட்ட வீரர்களும், பிரான்ஸ் கடற்படையைச் சேர்ந்த ஏராளமான வீரர்களும் கொரோனாவால் பாதித்துள்ளனர். இந்திய ராணுவத்திலும் இதுவரை 2 ராணுவ மருத்துவர்கள், நர்சிங் உதவியாளர் ஒருவர் உட்பட 8 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. இந்நிலையில், மும்பையில் உள்ள இந்திய கடற்படை தளத்தை சேர்ந்த ஐஎன்எஸ் ஆங்ரே கப்பலின் வீரர்கள் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நேற்று அதிர்ச்சி தகவல் வெளியானது. பாதிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் கடற்படை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 25 பேர் அக்கப்பலில் பணியாற்றுபவர்களுக்கான குடியிருப்பில் தங்கியுள்ளனர். மற்றொருவர் அவரது தாயுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். அவருடைய தாயாருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்த அனைவருக்கும் வைரஸ் தாக்கம் இருக்கிறதா? என்று பரிசோதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் நோய் தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஊரடங்கு நேரத்தில் வெளியே சென்று வந்தபோதுதான் வைரஸ் தாக்கியதாக தெரிய வந்துள்ளது.

‘அறிகுறியே இல்லை’ கடற்படை வெளியிட்ட அறிக்கையில், `கடற்படையில் 21 பேருக்குதான் வைரஸ் தாக்கியுள்ளது. இவர்களில் பெரும்பாலான வீரர்களுக்கு அதற்கான அறிகுறியே காணப்படவில்லை. கடந்த 7ம் தேதி கப்பலில் பயணம் செய்த உயர் அதிகாரி ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Mumbai ,Marines , Mumbai, Marines, Corona
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!