×

டிவிட்டரில் பொழுதை கழித்த பிரதமர் மோடி

கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இது, மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில் பல்வேறு அமைச்சகங்கள் தாங்கள் செய்த பணிகள் குறித்து டிவிட்டரில் தகவல் தெரிவித்திருந்தன. இவை அனைத்துக்கும் பிரதமர் மோடி பதில் அளித்து, அமைச்சகங்களில் செயல்பாடுகளை பாராட்டியுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘கொரானாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியர்கள் அனைவரும் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்தில் சுவிட்சர்லாந்தின் ஜெர்மட் நகரில் உள்ள மேட்டர்ஹார்ன் மலையில் ஆயிரம் மீட்டருக்கு அதிகமான பரப்பில் தேசியக் கொடி ஒளிர விடப்பட்டு உள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

இதற்கு டிவிட்டரில்  நேற்று மோடி அளித்துள்ள பதிலில், ‘கொரானாவை மனிதநேயம்  நிச்சயம் வெல்லும்,’ என குறிப்பிட்டுள்ளார். ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘ஊரடங்கு காலத்தில் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்ட போதும், ரயில்வே தனது பணியை நிறுத்தவில்லை. தளராத அர்பணிப்புடனும், கடின உழைப்புடனும், மிக கவனமாக திட்டமிட்டு இந்த நாட்டை ரயில்வே சுமூகமாக இயக்குகிறது,’ என கூறியுள்ளார்.  இதற்கும் பதில் அளித்த மோடி, ‘இந்திய ரயில்வே குழுவினரை நினைத்து பெருமை அடைகிறோம். இந்த சிக்கலான நேரத்திலும், அவர்கள் நமது மக்களுக்காக தொடர்ந்து உதவுகின்றனர்,’ என குறிப்பிட்டிருந்தார்.

பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் துனது டிவிட்டரில், ‘ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்த ஊழியர்களுக்கு நன்றி,’ என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த மோடி, ‘நாடு முழுவதும் எரிசக்தி தேவைகளை நிறைவேற்ற பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்,’ என குறிப்பிட்டிருந்தார்.  இதேபோல், நிதித்துறை உட்பட பல துறைகளின் டிவிட்டுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

Tags : Modi , Twitter, PM Modi
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...