×

ஊரடங்கில் பொங்கி வழிந்த பாசம்,..பெட்டி, பெட்டியாக விற்று தீர்ந்த காண்டம், கருத்தடை மாத்திரைகள்: மும்பை, ஐதராபாத் ரொம்ப மோசம்

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் குடும்பத்தினருடன்  வீட்டிலேயே கும்மாளமாக உள்ளனர். மூன்று வேளையும் பிடித்ததை சமைத்து மூக்கு பிடிக்க சாப்பிடுவது, டி.வி. பார்ப்பது, செல்போனில் பொழுதை கழிப்பது, தூங்குவது இதுதான் பெரும்பாலான மக்களின் வேலையாக இருந்து வருகிறது.  இவர்கள் கடந்த 25 நாட்களில் எந்த பொருட்களை அதிகம் வாங்கினர் என வர்த்தக மற்றும் ஆன்லைன் நிறுவனங்களிடம் விவரம் கேட்கப்பட்டது. அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அந்த பட்டியல் வருமாறு: பலான ஐட்டம்:
* சென்னை மக்கள் ‘சானிடைசர்’ அதிகம் வாங்கியுள்ளனர்.
* மும்பை ஆசாமிகள் காண்டம்களை அதிகம் வாங்கி குவித்துள்ளனர்.
* ஐதராபாத் பெண்கள் ஐ-பில் கருத்தடை மாத்திரைகளை அதிகம் வாங்கி உள்ளனர்.
* பெங்களூரு, புனேயில் உள்ள பெண்கள் கர்ப்ப பரிசோதனை கருவிகளை அதிகம் வாங்கியுள்ளனர்.
* டெல்லி மருந்தகங்களில் தெர்மோ மீட்டர் மற்றும் நாப்கின்களுக்கு அதிகளவில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.
சாப்பாடு:
* ஐதராபாத் மக்கள் வழக்கம்போல் தங்களின் விருப்ப உணவான பிரியாணியை வாங்க அதிகளவில் ஆர்டர் கொடுத்துள்ளனர்.
* சென்னையில் இட்லிக்கான ஆர்டரும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.  
* மும்பை, பெங்களூரில் தோசை அதிகளவில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.
* ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பீட்சா அதிகம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. *
காய்கறிகள்:
* பெங்களூரு, ஜெய்ப்பூர், புனேயில் பலசரக்கு பொருட்களில் காய்கறிகளோடு, தக்காளியை அதிகளவில் வாங்கியுள்ளனர்.
* சென்னை, டெல்லி, மும்பை மற்றும் ஐதராபாத்தில் வெங்காயம் அதிகம் வாங்கப்பட்டுள்ளது.
டீ, ஸ்நாக்ஸ்:
* குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ், பிஸ்கெட்டுகள் நாடு முழுவதும் அதிகமாக விற்று தீர்ந்துள்ளது.

குட்கா கேட்ட குறும்பர்கள்
உ.பி,யில் ஊரடங்கின் போது உணவு, மருந்து தேவைகளுக்கு உதவுவதற்காக மாநில அரசின் அவசர உதவி எண் 1076 அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த எண்ணுக்கு போன் செய்த பலர் மருந்துக்கு பதிலாக, ‘சார் ரசகுல்லா வேணும் சார்...’, ‘பான்பராக், குட்கா, சரக்கு வேணும் சார்...’ என்று கேட்பதால் போலீசார் நொந்து நூலாகின்றனர். இது ஒருபுறம் இருக்க குழந்தைகளும் போன் செய்து, ‘போலீஸ் அங்கிள் சிப்ஸ் வேணும், பீட்சா வேணும்...’ என்று நச்சரிக்கின்றனர்.

Tags : Boxing ,Hyderabad ,Mumbai , Curfew, Mumbai, Hyderabad
× RELATED ஐபிஎல் 2024: மும்பை அணிக்கு எதிரான...