×

அரபு தொழிலதிபர் குடும்பத்துடன் சிறப்பு விமானத்தில் அபுதாபி பயணம்

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால் உள்நாடு மற்றும் சர்வதேச பயணிகள் விமான சேவைகள் முழுவதுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரசு நாடான அபுதாபியிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த ஒரு தொழிலதிபர்  குடும்பம் சிகிச்சை முடித்தனர். ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அவர்கள்  நாட்டிற்கு திரும்பமுடியவில்லை. 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்த பின்பு நாடு திரும்பலாம் என்று சென்னையிலே தங்கியிருந்தனர். ஆனால் ஊரடங்கு வரும் மே 3 ம்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த தொழிலதிபர் தங்கள் நாட்டு அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். .அதன்பேரில் அந்நாட்டு தூதரக அதிகாரிகள், இந்திய அரசிடம் பேசி சிறப்பு அனுமதி பெற்றனர். அதன்படி நேற்று மாலை 6.40 மணிக்கு சென்னை சர்வதேச விமானநிலையத்திலிருந்து சிறப்பு  ஆம்புலன்ஸ் தனி விமானத்தில் ஐக்கிய அரபு தொழிலதிபர் குடும்பத்தினர் அபுதாபி புறப்பட்டு சென்றதுஆம்புலன்ஸ் விமானத்தில் தொழில் அதிபார் குடும்பத்தினர் 3 பர் விமானிகள், பொறியாளர்கள்,உதவியாளர்கள் 5 பேர் என மொத்தம் 8  பேர் பயணம் செய்தனர்.

Tags : trip ,Abu Dhabi ,flight ,businessman family ,Arab , Coronavirus, Arab businessman. Good flight, Abu Dhabi
× RELATED 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!!