×

சிம்மம்

20.6.2024 முதல் 26.6.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சந்தோஷம் அதிகரிக்கும். அவரோடு சுக்கிரனும் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செவ்வாய் சொந்த வீட்டில் ஆட்சி பலத்தோடு இருக்கின்றார். அதனால் நினைத்த காரியங்களை வேகமாக செய்ய ஆரம்பிப்பீர்கள். வெற்றியும் கிடைக்கும். செவ்வாய் பலத்தோடு இருப்பதால் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்பு உண்டு. சொத்துக்கள் வாங்குவதும் விற்பதும் நல்ல பலனைத் தரும். வியாபாரம் வெற்றிநடைபோடும் உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள், கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

கவனம் தேவை: விருப்பமில்லாத இடமாற்றத்தால் சிலர் சங்கடப்படுவார்கள் அஷ்டம ராகுவும் குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் கேதுவும் எந்த நல்ல காரியத்திலும் சில பிரச்னைகளை ஏற்படுத்தவே செய்வார்கள் என்பதால் கவனம் தேவை. வக்ர சனியின் பார்வை செவ்வாய் மீது விழுகிறது வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையோடு ஓட்ட வேண்டும். அவ்வப்பொழுது பராமரித்து நல்லபடியாக வைத்திருக்க வேண்டும்.

பரிகாரம்: பிரதோஷ நேரத்தில் லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். பசுக்களுக்கு உணவளியுங்கள். பாரம் குறையும். சூரியனை வழிபட பிரகாசமான வாழ்க்கை கிடைக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tags : Leo ,
× RELATED சிம்மம்