×

சிம்மம்

27.6.2024 முதல் 3.7.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் சூரியன் சுக்கிரனோடு இணைந்து லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு. அதோடு குரு உங்கள் தனஸ்தானத்தைப் பார்வையிடுவதால், பணச் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. கேட்ட இடத்தில் பணம் கிடைத்துவிடும். குடும்ப உறவுகளும் சுமுகமாகவே இருக்கும். காரணம் பதினோராம் இடத்தில் இருக்கின்ற சுக்கிரன். கண்டகச் சனி இருந்தாலும்கூட அதை வக்கிரகதியில் இருப்பதால், பிரச்னைகள் சற்று குறையும். பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பலம் பெற்று இருப்பதால், சகோதர உறவுகள் கை கொடுக்கும்

கவனம் தேவை: அஷ்டம ராகு, இரண்டில் கேது கவனத்தில் கொள்ளவும். பிரயாணங்களில் கவனம் தேவை. சனி மூன்றாம் பார்வையாக செவ்வாயைப் பார்க்கின்றார். எனவே வண்டி வாகனங்களில் கவனம் அவசியம். 12ஆம் இடத்தில் புதன் இருப்பதால், பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 28.6.2024 காலை 4.33 முதல் 30.6.2024 காலை 7.34 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: பிரதோஷ நேரத்தில் லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். பசுக்களுக்கு உணவளியுங்கள். பாரம் குறையும். சூரியனை வழிபட பிரகாசமான வாழ்க்கை கிடைக்கும்.

Tags : Leo ,
× RELATED சிம்மம்