×

மஞ்சூர் -கோவை சாலையில் உலா வரும் காட்டு யானைகள்

மஞ்சூர்: மஞ்சூர்-கோவை சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளது. கெத்தையை சுற்றிலும் உள்ள வாழை, பாக்கு மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களில் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதுடன் நடு ேராடுகளில் நின்று அவ்வழியாக சென்று வரும் அரசு பஸ்கள் மற்றும் வாகனங்களை வழிமறிப்பது வாடிக்கையாக இருந்து. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

 இதனால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மஞ்சூர் - கோவை சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக நின்று போனது. கெத்தை, பரளி மின்நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வாரத்திற்கொரு முறை மின்வாரிய வாகனங்களில் வெள்ளியங்காடு பகுதிக்கு சென்று வருவதோடு சரி. மற்றபடி இந்த சாலையில் வாகன போக்குவரத்து அறவே தடைபட்டதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பெரும்பள்ளம், முள்ளி, மானார், அத்திகடவு பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவு நடமாடி வருகிறது.



Tags : road ,Manjur-Kovai ,Wild Elephants , Manjur-Kovai, road Wild, Elephants
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...