×

தர்மபுரி அருகே கொரோனா பாதித்தவர் தங்கிய வீட்டில் 5 பேரை தனிமை படுத்தி கண்காணிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தர்மபுரி:சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், கடந்த 20 நாட்களுக்கு முன், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொ.துறிஞ்சிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். அவர் சேலம் திரும்பிய நிலையில், அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் உறுதியானது. இதனால், அவரது உறவினர்கள் யாருக்கேனும் கொரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து, சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அவரது உறவினர்கள் 5 பேரின் ரத்த மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அந்த பகுதிக்கு வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் தங்கியிருந்த வீட்டிற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, பொ.துறிஞ்சிப்பட்டியில் சேலம் நபரின் உறவினர் குடும்பத்தினரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர். மாவட்ட சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரகத்துறை, காவல்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதேபோல், பொ.துறிஞ்சிப்பட்டியில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் யாரேனும் தங்கியுள்ளனரா, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் கற்பக வடிவு தலைமையில், வட்டார மருத்துவர் கவுரிசங்கர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  கிருமிநாசினி தெளிக்கும் பணியில், தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.



Tags : home ,victim ,Corona ,Dharmapuri ,Corona Victim , Corona victim',preventive, measures
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு