×

ஏப்ரல் 20 முதல் தொழிற்சாலைகள் இயங்காவிட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் : பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவிப்பு

சென்னை : ஏப்ரல் 20 முதல் தொழிற்சாலைகள் இயங்காவிட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை முதற்கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.அதை தொடர்ந்து அத்தியாவச பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து, வேறு எந்த வணிக நிறுவனங்களும் இயங்காது என அறிவிக்கப்பட்டது.

இதனால் வாகனத்துறையின் வர்த்தக பயன்பாடும் முடக்கப்பட்டது.நாட்டிலுள்ள அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களுடைய தொழிற்சாலைகளை மூடினர். இதற்கிடையில் ஏப்ரல் 14ம் தேதி மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்றி பிரதமர் மோடி, மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவித்தார்.இதனால் அத்தியாவச பொருட்களை தவிர மற்ற தேவைகளுக்கான வர்த்தக வாய்ப்புகள் முடங்கிப்போயுள்ளன.

இந்த நிலையில் ஏப்ரல் 20 முதல் தொழிற்சாலைகள் இயங்காவிடில் ஊழியர்களின் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதே நேரம் தொழிற்சாலைகள் இயங்கினால் சம்பள பிடித்தம் இருக்காது என கூறியுள்ளது. இதுதொடர்பான தொழிலாளர்களுடன் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. முடிவில் பஜாஜ் நிறுவனத்தின் கோரிக்கையை தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊரடங்கு காலத்திற்கான தொழிலாளர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்ய பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது.இதற்கிடையில் சில தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வருகின்ற திங்கட்கிழமை(ஏப்ரல் 20) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Bajaj Auto , Factories, Employees, Salary, Favorite, Bajaj Auto, Company, Announcement
× RELATED ஜி.எஸ்.டி வரி விகிதம் 18% ஆக குறைந்தால்...