×

இந்தியாவில் முதன் முறையாக காவல் அதிகாரி ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு: பஞ்சாபில் சோகம்

பஞ்சாப்: இந்தியாவில் முதன் முறையாக காவல் அதிகாரி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். பஞ்சாப் மாநிலம் லூதியானா உதவி ஆணையர் அணில் கோலி கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், மே 3-ம் தேதி வரை  ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 24 மணிநேரத்தில் புதிதாக ஆயிரத்து 76 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 32 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன்படி, ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14378 அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 480ஆக அதிகரித்துள்ளது. 1991 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்கனவே மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலம், லூதியானா உதவி காவல் ஆணையர் அனில் கோலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பிளாஸ்மா சிகிச்சைக்கு ஒரு நன்கொடையாளர் ஏற்பாடு செய்யப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் பஞ்சாப் காவல்துறை மற்றும் பஞ்சாப் மக்களுக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார்.

Tags : casualty deaths ,Punjab India , India, police officer, corona, casualties
× RELATED இந்தியாவில் உள்ள ரயில்வே...