×

ஊரடங்கை மீறி மயிலாடுதுறையில் கறி விருந்துடன் கொரோனா சோகத்தை கொண்டாடிய கூட்டம்!

மயிலாடுதுறை : ஊரடங்கை மதிக்காமல் மயிலாடுதுறை அருகே கறி விருந்து நடத்தி அதனை டிக் டாக் செய்தியில் பதிவிட்ட 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட  வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆவர். இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் வெளியூரைச் சேர்ந்தவர்களும் என 30 பேர் சேர்ந்து வாய்க்கால் மதகு அருகே பிரியாணி சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

இதனை வீடியோவாக பதிவு செய்து டிக் டாக்கிலும் வெளியிட்டுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இளைஞர்களின் இத்தகைய செயல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதே போல கடந்த புதன்கிழமையன்று கும்பகோணம் அருகே தியாகசமுத்திரத்தில் கொரோனா விருந்து என்ற பெயரில் கூட்டாக கறி விருந்து சமைத்து கிராம இளைஞர்கள் கொண்டாடியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்களும் காப்புக் காட்டில் கறி விருந்து நடத்தினர். கறி விருந்தில் பங்கேற்ற 13 பேருக்கும் தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை பற்றி கவலைப்படமால் இளைஞர்கள் கறி விருந்து நடத்துவது அண்மை காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


Tags : Crowds ,tragedy ,Corona ,curry party ,Mayiladuthurai Meeting ,Mayiladuthurai , Curfew, Mayiladuthurai, curry, dinner, corona, meeting
× RELATED கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்...