×

நாகர்கோவிலில் போலீசில் சிக்கியவர்களுக்கு முக கவசம் வழங்கிய பெண் சப் இன்ஸ்பெக்டர் : அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு பெண் சப் இன்ஸ்பெக்டர் தனது சொந்த செலவில் முக கவசம் வாங்கி கொடுத்து அறிவுரை வழங்கினார். குமரி மாவட்டத்தில் 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குமரி மாவட்டம் ரெட் அலர்ட் பட்டியலில் உள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முக கவசம் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு முக கவசம் அணியாமல் நடந்து வந்தால் ரூ.50ம், பைக்கில் வந்தால் ரூ.100ம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் வந்தவர்களை போலீசார் பிடித்து எச்சரிக்கை செய்தனர். இனி முக கவசம் அணியாமல் வந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என கூறினர்.

நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர்கள் அணில் குமார்,  சார்லெட் தலைமையில் நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் இருந்தனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கு தனது சொந்த செலவில் சப் இன்ஸ்பெக்டர் சார்லெட், அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் முக கவசம் வாங்கி அணிவித்தார். இனி முக கவசம் அணியாமல் வரக்கூடாது என எச்சரித்தார். போலீஸ் சோதனையின் போது சைக்கிளில் பலாப்பழ வியாபாரி ஒருவர் முக கவசம் அணியாமல் வந்தார். அவருக்கும் முக கவசம் வாங்கி கொடுத்து போலீசார் அறிவுரை கூறினர்.



Tags : Sub Inspector ,Nagercoil ,Who Gave Face Shields to Police , Woman ,Sub Inspector , Nagercoil, sent
× RELATED சிவகாசியில் விதிமீறி இயங்கிய பட்டாசு...