×

கொரோனா பரிசோதனைக் கருவிகள் எத்தனை - என்ன விலைக்கு வாங்கப்பட்டன? சத்தீஸ்கர் அரசை போல் அறிவியுங்கள்! : தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை : கொரோனா வைரஸ்  பரிசோதனைக் கருவிகள் எத்தனை  - என்ன விலை- எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.சீனாவில் இருந்து 6 லட்சம் துரித பரிசோதனை கருவிகளை வாங்கி இருக்கும் மத்திய அரசு, அவற்றில் இருந்து வெறும் 12,000 கருவிகளை மட்டுமே தமிழகத்திற்கு தர முன்வந்துள்ளது. மத்திய அரசை மட்டும் நம்பாமல் தமிழக அரசு சீன நிறுவனத்திடம் நேரடியாகவே 4 லட்சம் கருவிகளை பெறுவதற்கு ஆர்டர் செய்து இருந்தது. இதில் இருந்து கால தாமாதமாகி 24 ஆயிரம் கருவிகள் தமிழகத்திற்கு கிடைக்கப் பெற்று இருக்கிறது. அதில் 12,000 கருவிகள் சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்கு 5000 கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது.

இந்நிலையில், சீனாவில் இருந்து கொரோனா வைரஸ்  பரிசோதனைக் கருவிகள் எத்தனை  - என்ன விலை- எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை அரசு அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் ட்விட்டரில் வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்திற்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை  சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.அதே போல் தமிழக அரசும் எவ்வளவு கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.நாடே உயிர் காக்கப் போராடிவரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன்! எனத் தெரிவித்துள்ளார்.


Tags : government ,Corona ,Tamil Nadu ,state ,Stalin ,Chhattisgarh , Coronation, Test, Tools, How Many, For Prices, Chhattisgarh, Tamil Nadu, Stalin, Request
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...