×

உணவுப்பொருள் என ஸ்டிக்கர் ஒட்டி சிமென்ட் ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல்

புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டல உதவி வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் நேற்று புழல் அண்ணா நினைவு நகர் செம்பியம் நெடுஞ்சாலை அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த ஒரு லாரியின் முன்பக்க கண்காடியில் உணவுப்பொருள் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அந்த லாரியை பின்தொடர்ந்து சென்றனர். அந்த லாரி புழல் அண்ணா நினைவு நகர் செம்பியம் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான சிமென்ட் மற்றும் பருப்பு குடோனுக்கு சென்றது.

அதிகாரிகள் அந்த லாரியை  சோதனை செய்தபோது, சிமென்ட் மூட்டைகள் இருப்பது தெரிந்தது.  மேலும், இதேப்போல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 3 லாரிகளையும் சோதனை செய்தபோது, சிமெண்ட் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 4 லாரிகளையும் பறிமுதல் செய்து, புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், லாரி டிரைவர்களை பிடித்து, அதன் உரிமையாளர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.  ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் உணவுப்பொருள் என ஸ்டிக்கர் ஒட்டி, சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : 4 trucks , cement , sticker, food item seized
× RELATED மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற...