×

திருமங்கலத்தில், நிவாரணப் பொருட்கள் வழங்கும்போது தூய்மைப்பணியாளர்களின் காலில் விழுந்த அமைச்சர்

திருமங்கலம்: தூய்மைப் பணியாளர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் எனக்கூறி அவர்களது காலில் விழுந்து வணங்கி, நிவாரணப் பொருட்களை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் வழங்கினார். மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் 750 தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருமங்கலம் நகராட்சி, கப்பலூர், மேலக்கோட்டை, சாத்தங்குடி, ஆலம்பட்டி, அம்மாபட்டி, உரப்பனூர், செக்காணுரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார்.  

இதில், ‘‘கொரோனா பாதிப்பு சமயத்தில் தங்களது உயிரை துச்சமாக மதித்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும், தூய்மைப் பணியாளர்கள் கடவுளுக்கு சமமமானவர்கள்’’ எனக் கூறிய அமைச்சர், தூய்மைப் பணியாளர்களின் கால்களில் விழுந்து வணங்கியப் பின்பு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அமைச்சர் தங்களது காலில் விழுந்த நிகழ்ச்சியால் தூய்மைப் பணியாளர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.திருமங்கலம் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ‘‘மதுரை மாவட்டத்தில் 32 லட்சம் மக்கள் உள்ளனர். மாநகராட்சி பகுதியில் மட்டும் 15 லட்சம் பேர் உள்ளனர். இந்த சூழ்நிலையில் இங்கு தினசரி பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் பங்களிப்பும் போற்றுதலுக்குரியது. குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்’’ என்று பேசினார். பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை, முகக் கவசவம், கிருமிநாசினி உள்ளிட்டவைகளை வழங்கினார்.

Tags : minister ,Thirumangalam , At Thirumangalam, feet, cleaners , delivering relief goods
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி